Published : 19 Dec 2024 05:38 AM
Last Updated : 19 Dec 2024 05:38 AM
மேஷம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
ரிஷபம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரம் சிறக்கும் அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மிதுனம்: இல்லத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
கடகம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.
சிம்மம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் அன்பை பெறுவீர்கள்.
கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மனநிம்மதி கிட்டும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.
துலாம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை செய்து முடிப்பீர். மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
தனுசு: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தில் மனநிம்மதி பிறக்கும். உடல் உபாதைகள் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் நீங்கள் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.
மீனம்: சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று நீண்ட நாள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT