Published : 26 Oct 2024 05:45 AM
Last Updated : 26 Oct 2024 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் இடமாற்றம் எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் லாபம் உண்டு.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும்.

கடகம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். கணவன் - மனைவிக்குள் கருத்துமோதல் வரும். மனம்விட்டு பேசிக் கொள்வது நல்லது. வியாபாரம் ஏற்றம் தரும். உத்தியோகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் போராட்டம் இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: நீண்டநாளாக பேசாமல் இருந்த உறவினர் வந்து பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் மேன்மையுண்டு.

விருச்சிகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை முடித்துக்காட்டுவீர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர். வியாபாரத்தை விரிவுபடுத்தும்விதமாக வங்கிக்கடன் பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலனில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் இருக்கும்.

கும்பம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று முன்னேறுவீர்.

மீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x