Published : 07 Oct 2024 05:10 AM
Last Updated : 07 Oct 2024 05:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் சற்று தாமத மாகும். பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகளின் செயல்பாடுகள் அதிருப்தி தரும். தொழில், வியா பாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள்.

ரிஷபம்:எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.

மிதுனம்: தடைபட்ட வேலையை, மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவுகள் வேண்டாம்.

கடகம்: நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். அரசு, வங்கி காரி யங்கள் நல்லபடியாக முடியும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். உற வினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கன்னி: புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பழுதான வீட்டு உபயோக பொருட்களை மாற்றி, புதிது வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. பழைய பாக்கிகள் வந்துசேரும்.

துலாம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி உண்டாகும். பெற்றோர் உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிகம்: திடீர் பயணம், உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு: சொந்த பந்தங்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் விலகும்.

மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்ப்பீர் கள். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

கும்பம்: வீட்டில் தடைபட்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிக பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. திருமண பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x