Published : 28 Sep 2024 05:10 AM
Last Updated : 28 Sep 2024 05:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் பிரச்சினைகள் ஓயும். ஓரளவு பணவரவு உண்டு. தவிர்க்க முடியாத பயணங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பதில் சிரமம் இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும். தம்பதிக்குள் அன்யோன்யம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: மற்றவர்களுக்கு எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். திடீர் செலவினங்கள் கூடும். புண்ணிய தலங்களுக்கு சென்று வரவும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

சிம்மம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

கன்னி: குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். விவேகத்துடன் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

துலாம்: நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகரீதியாக பயணங்கள் இருக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுடன் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.

தனுசு: வீண் குழப்பம் விலகும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீட்டில் நிம்மதி பிறக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: பழைய பிரச்சினைகளை நினைத்து வருந்தாதீர். தம்பதிக்குள் விட்டுகொடுத்து போகவும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கியை வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: சோர்வு நீங்கி, முகப் பொலிவு கூடும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரரீதியான வெளியூர் பயணம் சாதகமாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x