Published : 26 Sep 2024 05:20 AM
Last Updated : 26 Sep 2024 05:20 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். வியாபாரரீதியாக பிரபலங்கள் அறிமுகமாவர். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும்.

மிதுனம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

கடகம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். மன நிம்மதி பிறக்கும். நவீன மின்னணு பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உங்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து விடவும்.

கன்னி: தம்பதிக்குள் நிம்மதியுண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

துலாம்: சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாக இருப்பீர். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். உத்தியோகத்தில் இருந்து வந்த குழப்பம் விலகும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர்கள்.

தனுசு: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். பழைய கடன் சுமையை நினைத்து நிம்மதி இழப்பீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மன நிம்மதிகிட்டும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

கும்பம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர், பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர். வியாபாரரீதியாக புது நபர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு பெறுவீர்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். தாயாரின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x