Published : 24 Sep 2024 05:10 AM
Last Updated : 24 Sep 2024 05:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நினைத்த காரியம் நிறைவேறும். மனக் குழப்பங்கள் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனை தோன்றும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

மிதுனம்: தம்பதிக்குள் அனுசரித்து போகவும். மனதில் ஒருவித பயம் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவீர். பணவரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர். உத்தியோகத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்படும்.

சிம்மம்: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

கன்னி: தொட்டது துலங்கும். தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர். பழைய கடனைப் பைசல் செய்ய வழி பிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியான பயணம் உண்டு.

துலாம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். அலுவலக ரீதியான வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும்.

விருச்சிகம்: சேமிப்புகள் கரையக் கூடும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துங்கள். வியாபாரம், உத்தியோகத்தில் எச்சரிக்கை தேவை.

தனுசு: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். நீண்ட நாள் எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

மகரம்: உங்கள் மதிப்பு உயரும். பணவரவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை நினைத்து மகிழ்வீர். குடும்பத்தில் விவாதம் வேண்டாம். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்: வீண் செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைப்படி செயல்படவும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x