Last Updated : 04 Sep, 2024 04:16 PM

 

Published : 04 Sep 2024 04:16 PM
Last Updated : 04 Sep 2024 04:16 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.5 - 11

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். வழக்கு சம்பந்தமாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கல் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். நடக்காது என்று நீங்கள் கிடப்பில் போட்ட காரியங்கள் உயிர் பெறும். பணம் சம்பந்தமாக நீடித்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.

குடும்பத்தினர் அனைவரும் உங்களுக்கு ஆதரவுக்கரம் கொடுப்பார்கள். தொழில் பலவிதமான வழிகளில் இருந்தும் உங்களுக்கு வருமானம் வரக்கூடிய ஒரு நல்ல காலகட்டம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை மேலிடம் உங்களுக்கான பொறுப்புகளை அதிகரிக்கும். நிறைய வேலை செய்ய வேண்டிய ஒரு சூழல் உருவாகும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் இருந்துவந்த தேக்க நிலை மாறும். ஒரே நேரத்தில் பலவிதமான கல்வியை பெறக்கூடிய சூழ்நிலை ஏற்படும் | பரிகாரம்: ஆண்டாளை வணங்க மனம் ஒருநிலைப்படும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மிக நல்ல யோகமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய செலவுகள் அனைத்தும் குறையும். மெதுவாக சென்று கொண்டிருந்த உங்கள் வாழ்க்கை திடீரென்று வேகம் பெறும். ஆனாலும் பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் போது மிக அதிக கவனம் தேவை.

கடன் கொடுக்கும் போதோ அல்லது கடன் வாங்கும் போதோ உறவுச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். எனவே உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்து வாங்குவது நன்மையைத் தரும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை பணியிடமாற்றம் பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்கள் பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் ஒரு உச்ச நிலையைத் தொடக்கூடிய அற்புதமான காலம் இது | பரிகாரம்: முருகனை வணங்க வாக்கில் தெளிவு பிறக்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் அகலும். தன்னம்பிக்கை மிளிரும். தைரியம் அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும். கடுமையான உழைப்பு உழைக்க வேண்டி இருக்கும். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டி இருக்கும்.

அதனால் குடும்பத்தில் பிரச்சினை, குடும்பத்தை கவனிக்க முடியாத சூழல் உருவாகும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் செய்பவர்கள் எதிலும் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படவேண்டும். இல்லையெனில் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

உத்யோகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும். எனினும் சிறுசிறு தடங்கல்களும் எதிர்மறை எண்ணங்களும் ஏற்படலாம். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும்.

வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் குறையும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மாணவர்கள் உடன் பழகுபவர்களிடம் மிகவும் கவனமுடன் பழக வேண்டும். உங்களை குழப்பி விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் | பரிகாரம்: சித்தர்களை வழிபட காரியத் தடங்கல் நீங்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x