Published : 04 Sep 2024 04:25 AM
Last Updated : 04 Sep 2024 04:25 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வேற்றுமதத்தினரின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

மிதுனம்: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மன நிம்மதி கிட்டும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்க கை ஓங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்.

கன்னி: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். வியாபாரத்தில் குழப்பம் நிகழும்.

துலாம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் மூலம் பணம் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

விருச்சிகம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகம் சிறக்கும்.

தனுசு: தம்பதிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி அகலும்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: நன்றி மறந்தவரை நினைத்து வருத்தமடைவீர். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

மீனம்: குழப்பம் நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். தொழிலில் பணியாட்களை மாற்றுவீர். உத்தியோகம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x