Published : 31 Aug 2024 04:18 AM
Last Updated : 31 Aug 2024 04:18 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்லவும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மிதுனம்: விலையுயர்ந்த கலை பொருட்கள் வாங்குவீர். மனைவிக்கு புது ஆடை, ஆபரணங்களை வாங்கி கொடுப்பீர். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். வெளியூர் பயணங்கள் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.

கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

துலாம்: வெளிவட்டாரத்தில், மதிப்பு, மரியாதை உயரும். நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். கடையில் சில மாற்றங்களை செய்வீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு.

தனுசு: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகுங்கள். கணவன் மனைவிக்குள் மனக்கசப்புகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீண் விவாதம் தவிர்க்கவும்.

மகரம்: வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கி வசூலாகும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். உடன்பிறந்தோர் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மீனம்: பழைய பொன்,பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர். மனைவியின் சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x