Published : 25 Aug 2024 05:18 AM
Last Updated : 25 Aug 2024 05:18 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். வீட்டில் குழப்பம் ஏற்படும். அமைதி காக்கவும். வியாபாரத்தில் சிக்கல் வரக் கூடும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெற அதிகமாக உழைக்க வேண்டும். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தீரும். மூத்த சகோதரர் உதவுவார். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர் ஆதரவாக இருப்பார். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

கன்னி: இங்கிதமாகப் பேசி மற்றவர்களை அசத்துவீர்கள். முக்கிய பிரமுகர்களால் ஆதாயமுண்டு. பங்குதாரர் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவல் கத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

துலாம்: யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: வீட்டில் விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர்.

தனுசு: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். எடுத்த வேலைகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வந்துசேரும். உத்தியோகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி கிட்டும்.

கும்பம்: எதிர்பார்த்தபடி சில வேலைகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மீனம்: புது திட்டங்களை தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாரின் மருத்துவ செலவு குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x