Published : 10 Aug 2024 04:12 AM
Last Updated : 10 Aug 2024 04:12 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். தேங்கிக் கிடந்த அலுவலக பணிகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபமுண்டு.

கடகம்: செலவுகளைக் குறைத்து சேமிப்பீர். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சியுண்டு. தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரரீதியாக விஐபிகளை சந்திப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி: அலைச்சல் இருக்கும். எடுத்த வேலைகளில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

துலாம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்.

தனுசு: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மன நிம்மதி கிட்டும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்:ஊர் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

கும்பம்:பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் பணியாட்களின் ஆதரவுண்டு.

மீனம்: கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பெரியோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x