Published : 02 Aug 2024 04:08 AM
Last Updated : 02 Aug 2024 04:08 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக்காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் குழப்பம் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

ரிஷபம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். முன்கோபத்தை குறைப்பீர். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: பயணங்கள் அலைச்சல் தரும். வேலைகளை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் நிதானம் தேவை. முன்கோபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பணவரவு உண்டு.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினை தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.

சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: கோபத்தை குறைத்து உயர்வதற்கான வழியை யோசிப்பீர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். முன் கோபம் விலகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

விருச்சிகம்: எடுத்த வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். பயணங்களில் கவனம் தேவை. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும்.

தனுசு: உறவினர், நண்பர்களால் விரயச் செலவுகள் வரக் கூடும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய பங்குதாரர் கிடைப்பார்.

மகரம்: மனதிடத்துடன் எதையும் முடித்து காட்டுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர். உத்தியோகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x