Published : 31 Jul 2024 04:06 AM
Last Updated : 31 Jul 2024 04:06 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகள் மனதை வாட்டும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கடகம்: எதிரிகள் பணிந்து போவார்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்மம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். பழைய பள்ளி நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

கன்னி: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

துலாம்: ஒருவித படபடப்பு, பயம் வந்து செல்லும். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். அமைதி காக்கவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்.

மீனம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x