Last Updated : 10 Jul, 2024 04:03 PM

 

Published : 10 Jul 2024 04:03 PM
Last Updated : 10 Jul 2024 04:03 PM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 11 - 17

கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் கிரகநிலை - ராசியில் புதன், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு, சந்திரன்- அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தில் இருந்து வந்த தாமதம் நீங்கி வேகம் எடுக்கும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் வேகம் பெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே பந்த பாசங்கள் கூடும். உறவினர்கள் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு: சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் கணவன் - மனைவியரிடேயே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

பூசம்: இந்த வாரம் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும். மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும்.

ஆயில்யம்: இந்த வாரம் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம்.

பரிகாரம்: சந்திரனை வணங்கி வர மனத்தெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு, சந்திரன்- லாப ஸ்தானத்தில் சூரியன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பங்குதாரர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். கலைத்துறையினருக்கு விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும்.

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

பூரம்: இந்த வாரம் தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசிகிட்டும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சந்திரன்- தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தொழில் விருத்தியடையும். தொழில் மேன்மை அடைவதற்கான வழிகளைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். திறமை வெளிப்படும்.

காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினை குறையும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணமிருப்பின் அதை தள்ளி வையுங்கள்.

அஸ்தம்: இந்த வாரம் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு அருந்த முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக் கூடும்.

பரிகாரம்: பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x