Published : 05 Jul 2024 05:04 AM
Last Updated : 05 Jul 2024 05:04 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: தாயாரின் உடல்நலம் சீராகும்.இங்கிதமாகவும், இதமாகவும் பேசி அனைவரையும் கவருவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேன்மை அடைவீர்.

மிதுனம்: திட்டமிட்டு சில வேலைகளை போராடி முடிப்பீர். குடும்பத்தில் சிறு சிறு கருத்துமோதல் வரும். பங்குதாரர் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை குறை கூற வேண்டாம்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

சிம்மம்: புது புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வெளியூர் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு.

துலாம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர். வியாபார வட்டத்தில் மதிப்புகூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

விருச்சிகம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் விரயச் செலவுகள் வரக்கூடும். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

தனுசு: முகத்தில் தெளிவு பிறக்கும். குடும்பத்துடன் சேர்ந்து புண்ணிய தலங்கள் சென்று வருவீர். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி நண்பர்களாவார்கள். வியாபாரம் சிறக்கும்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். புது ஆடை, ஆபரணங்களில் மனம் லயிக்கும். அலுவலகத்தில் சக ஊழியருடன் இணக்கமாக இருக்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

கும்பம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்து காட்டுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் சக ஊழியர் உதவியுடன் சாதனை படைப்பீர். வியாபார வட்டத்தில் கவுரவ பதவி தேடி வரும்.

மீனம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். புதிய நட்புகளால் உற்சாகமடைவீர். கோபத்தை குறைக்கவும். வியாபாரத்தில் போட்டி விலகும். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x