Published : 03 Jul 2024 04:29 AM
Last Updated : 03 Jul 2024 04:29 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சி வெற்றி அடையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளால் நிம்மதி கிட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர். நல்ல இடவசதியுடன் கூடிய குடியிருப்புக்கு செல்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வழி பிறக்கும். பணவரவு திருப்தி தரும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. பொறுப்புகள் அதிகரிக்கும்.

கன்னி: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர். தம்பதிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். வெளியூரிலிருந்து நற்செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.

துலாம்: திடீர் செலவு, மன உளைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் வேளையாட்களால் தொந்தரவு வரும். புதிய வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம்: பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர் வலிய வந்து பேசுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: பால்ய நண்பர்கள் உதவுவர். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு புது வேலையும் அமையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்.

கும்பம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். மனைவி, தாயாரின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் புதிய பதவி கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் உடைபடும்.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய பள்ளி நண்பர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x