Published : 02 Jul 2024 04:36 AM
Last Updated : 02 Jul 2024 04:36 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நெடுநாட்களுக்கு பிறகு சில நண்பர்களை சந்திப்பீர். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.

ரிஷபம்: உடல் சோர்வு, அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் புதிய மேலதிகாரி பாராட்டுவார்.

மிதுனம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் ஏற்பீர்கள்.

கடகம்: எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்த மனஸ்தாபம் விலகும். கூட்டுத்தொழிலில் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவர்.

சிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவால் பூர்வீக சொத்து விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவர்.

துலாம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தரும்.

விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரத்தில் வேலையாட்கள் நன்றியுடன் இருப்பர். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும்.

தனுசு: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் எளிதாக செய்வீர்கள்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்கள் அன்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும்.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x