Published : 23 May 2024 05:17 AM
Last Updated : 23 May 2024 05:17 AM
பொதுப்பலன்: ஜோதிடம், யோகாசனம் பயில, அரசு அதிகாரிகளை சந்திக்க, பரத நாட்டியம் கற்றுக் கொள்ள, செங்கல் சூளை பிரிக்க, வழக்குகள் பேசி முடிக்க நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.
மேஷம்: பேச்சில் நிதானம் தேவை. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேற்படிப்பு படிக்கவும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
கடகம்: இல்லத்தில் விருந்தினர் வருகை உண்டு. மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வாகனப் பழுது நீங்கும். புதிய பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
சிம்மம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் உங்கள் மீது மரியாதை கூடும்.
கன்னி: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர் . பணம் புரளும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளை கையாண்டு, வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலக பிரச்சினை விலகும். புதிய பதவி கிடைத்து பொறுப்புகள் கூடும்.
துலாம்: சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். கையில் பணம் புரளும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். தாயார், மனைவியின் உடல்நலம் சீராகும். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
விருச்சிகம்: பயணங்கள் அலைச்சல் தரும். எடுத்த வேலையை முடிக்க போராடுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். தேவையற்ற பொருட்களை சேர்க்க வேண்டாம். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
தனுசு: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள். தொழிலில் போட்டிகள் குறையும். புதிய கிளை திறக்க முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் வீண் பழிகள் வர வாய்ப்பு உண்டு.
மகரம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். இல்லத்தில் புது பொருட்கள் சேரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயல்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். முன்கோபம் குறையும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும். பணிச்சுமை அதிகரிக்கும்.
மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய வழக்குகள் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வீண் விவாதம் தவிர்க்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment