Last Updated : 22 May, 2024 07:55 PM

 

Published : 22 May 2024 07:55 PM
Last Updated : 22 May 2024 07:55 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 23 - 29

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,

பரிகாரம்: முன்னோர்களை தினமும் வணங்கி வர எல்லா பிரச்சினைகளிலும் சுமூக முடிவு ஏற்படும். காரிய தடைகள் நீங்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன், சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சுபச்செலவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கலைத்துறையினருக்கு லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள்.

தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல்வதிகள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சிவன் கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மனை பூஜித்து வணங்கி வர காரியங்கள் சாதகமாக முடியும். கடன் பிரச்சினை தீரும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.

காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன்தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியை பூஜித்து வணங்கி வர மனகுழப்பம் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். உடல்நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும்.

ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். பெண்களுக்கு காரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். மனகவலை அகலும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

வீண்பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விவகாரங்கள் வரலாம். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை பூஜித்து வணங்கி வர குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் குறித்த காலத்தில் வெற்றி பெறும். உடல்நலம் சீராகும். மனம் ஒருநிலைப்படும். பணவரத்தை தரும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மைதரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. கூடுதல் உழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருந்த வீண் குழப்பம் நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடப்பது நன்மை தரும். பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும்.மகிழ்ச்சி அதிகரிக்கும்.

முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். கடன் பிரச்சினை தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட மனகஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: சித்தர்களை வியாழக்கிழமையில் வணங்கி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும்.

கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளின் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதிருப்தி ஏற்படும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை -
ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்:
24-05-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். சுபச்செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். எதைப் பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள்.

தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட உடல் ஆரோக்கியம் உண்டாகும். கஷ்டங்கள் குறையும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் செவ்வாய், ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 24-05-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். நண்பர்களிடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி முல்லை மலர் சாற்றி வழிபடுவது செல்வ சேர்க்கையை தரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x