Published : 04 Jan 2024 06:01 AM
Last Updated : 04 Jan 2024 06:01 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர்கள். அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும்.

மிதுனம்: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர்கள். அக்கம் -பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவார்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கன்னி: நெருங்கியவர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். தியானத்தில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

துலாம்: வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்தகால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள்.

தனுசு: முகப்பொலிவு கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடன் தொகையை வசூலித்து விடுவீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்.

மகரம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வேலைப்பளு குறையும்.

கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

மீனம்: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகமாகும். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் போய்விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x