Published : 14 Dec 2023 06:01 AM
Last Updated : 14 Dec 2023 06:01 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்.

ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களுக்கு உதவுவது போல் உபத்திரத்தை தருவார்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.

மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவர். தாயார் ஆதரித்து பேசுவார். வேற்றுமதத்தவர், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. பழைய வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக சந்திக்காத நண்பரை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பணவரவு திருப்தி தரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகள், உறவினர்கள் உங்கள் நிலைமையை புரிந்துகொண்டு செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசித்து வருந்துவீர். நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். அரசால் ஆதாயம் உண்டு. உடன் பிறந்தவர்கள் ஆதரவுடன் சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நடந்தேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப்பொலிவு கூடும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

தனுசு: பண விஷயத்தில் கறாராக இருங்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பிள்ளைகளிடம் அதிக கோபத்தை காட்ட வேண்டாம்.

மகரம்: முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் இணக்கமாக இருக்கவும்.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். வாகனம் செலவு வைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x