Published : 09 Dec 2023 05:50 AM
Last Updated : 09 Dec 2023 05:50 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை நல்வழிப்படுத்தி பொறுப்புடன் வளர்க்க எண்ணுவீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். நண்பர்கள், உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்: வெளி நாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பழைய வழக்குகள் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

துலாம்: ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. கலை பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். சகோதர வகையில் கருத்து மோதல் வரும். தாயார்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

மகரம்: தடைபட்டுவந்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். சொந்த - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர். புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். புதிய பதவி உங்களை தேடி வரும்.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். கலை பொருட்கள் சேரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x