Published : 07 Dec 2023 05:48 AM
Last Updated : 07 Dec 2023 05:48 AM
மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களுடனான சந்திப்பு நிகழும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நீங்க வழி கிடைக்கும்.
ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த ஈகோப் பிரச்சினை நீங்கும். சொத்து தொடர்பான குழப்பங்கள் நீங்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்: எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்கவும். சகோதரர்கள் உதவுவர்.
கடகம்: இங்கிதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
சிம்மம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை சாதிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து, புதுப்பிக்க திட்டமிடுவீர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் இருக்கும்.
கன்னி: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்தால், மனம்விட்டுப் பேசிக் கொள்வது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.
துலாம்: நீண்டநாள் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். பணவரவு திருப்தி தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால்ஆதாயமடைவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டு. நண்பர்கள், உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
மகரம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டார பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் குடும்ப பிரச்சினைகளைக் கூற வேண்டாம்.
கும்பம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். ஆன்மிகம், தியானத்தில் மனம் லயிக்கும்.
மீனம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். ஆன்மிகம், தியானத்தில் மனம் லயிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment