Published : 26 Nov 2023 05:24 AM
Last Updated : 26 Nov 2023 05:24 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆன்மிகவாதிகளுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவர்.பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மகன், மகளின் கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். புதிய நகை வாங்குவீர்கள்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனது காயப்படும்படி பேசாதீர்கள். பிறருடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். தியானம் செய்யவும்.

துலாம்: உங்களது நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர், வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். மனைவிவழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பழகவும்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். பணவரவு உண்டு.

மகரம்: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x