Published : 20 Nov 2023 05:42 AM
Last Updated : 20 Nov 2023 05:42 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது குறித்து யோசிப்பீர்கள்.

ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். ஆன்மிக நாட்டம் கூடும்.

மிதுனம்: விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் நடந்து முடியும். புதியவர்கள் நட்பால் ஆதாயம் உண்டு.

கடகம்: விமர்சனங்கள், கேலி பேச்சுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். பொருட்கள் சேரும்.

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் பொறுமை தேவை.

கன்னி: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

துலாம்: மற்றவரை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். சுற்றி இருப்பவர்களில் உண்மையானவரை கண்டறிவீர்கள். பொருள் சேரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பு செலவு வந்துபோகும். பழைய கடன் பிரச்சினை தீரும்.

தனுசு: துணிச்சலாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் மரியாதை, அந்தஸ்து உயரும். மனதுக்கு இதமான சேதி வரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்தது எல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் அலைச்சல், செலவு அதிகரிக்கும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகனப் பயணத்தின்போது அதிக கவனம் தேவை.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x