Published : 15 Nov 2023 05:45 AM
Last Updated : 15 Nov 2023 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பீர்கள்.

ரிஷபம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.

சிம்மம்: பணவரவு உண்டு. அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள்.

கன்னி: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து உறவினர்கள் சிலர் உதவி கேட்பார்கள். முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகளுடன் சந்திப்பு நிகழும்.

விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனது காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வீண்பழி வந்து சேரும்.

தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வீடு, வாகன யோகம் உண்டு.

கும்பம்: குழப்பங்கள் இன்றி தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். சிலருக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்.

மீனம்: மனக் குழப்பம் விலகும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்ப்பது அவசியம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x