Published : 02 Nov 2023 05:48 AM
Last Updated : 02 Nov 2023 05:48 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும்.

ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர். குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். முன்கோபத்தால் நண்பர்கள் மத்தியில் பகை உண்டாகும்.

கடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

சிம்மம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். முன்கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

கன்னி: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்: இழுத்தடித்த காரியங்கள் அனைத்தும் இனி முடிவுக்கு வரும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கலை பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

தனுசு: நீண்ட நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனப் பழுது நீங்கும்.

மகரம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். மனக் குழப்பங்கள் நீங்கும்.

கும்பம்: சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குழப்பங்கள் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் பணம் தேவையான அளவு இருக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்க்கவும். பணவரவு திருப்தி தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x