Published : 17 Oct 2023 05:46 AM
Last Updated : 17 Oct 2023 05:46 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். மாலை முதல் எதிலும் நிதானம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்கள் நண்பர்களாவார்கள். குழப்பம் நீங்கி வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: பழைய பள்ளி நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுஙகள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். இழுபறியாக இருக்கும் வழக்கில் வெற்றி உண்டு.

சிம்மம்: நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கன்னி: குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள். மாலை முதல் தொட்டது துலங்கும். முன்பின் தெரியாதவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். பணவரவு உண்டு.

விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் வரும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் விருப்பங்களை பிள்ளைகளிடம் திணிக்க வேண்டாம்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். மனைவிவழி உறவினர்களிடம் இணக்கமாக இருக்கவும்.

கும்பம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திடீர் பணவரவு உண்டு.

மீனம்: மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும். யாரையும் உதாசீனப்படுத்தக் கூடாது. கலை பொருட்கள் சேரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x