Published : 08 Oct 2023 05:36 AM
Last Updated : 08 Oct 2023 05:36 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீடு, மனை வாங்கத் திட்டமிடுவீர்கள். தாய்வழி உறவுகளால் மனக் கசப்புகள் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவர். பழைய கடன்களில் ஒருசிலவற்றை பைசல் செய்வீர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்கவும்.

கடகம்: முன்கோபம் அதிகமாகும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர். நீண்ட நாளாக பேசாத உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவர். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்: நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாகனத்தை விற்க முயற்சி செய்வீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: பணவரவு தருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு உண்டு.

மகரம்: சமயோஜித புத்தியால் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். யதார்த்தமாகவும், தத்துவமாகவும் பேசி எல்லோருடைய இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர்கள்.

கும்பம்: பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பிருக்கிறது. புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள்.

மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அதிகம் அக்கறை காட்டுவீர்கள். நெருங்கிய நண்பரை சந்தித்து பேசுவீர். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x