Published : 05 Oct 2023 05:36 AM
Last Updated : 05 Oct 2023 05:36 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: முகப் பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள்.

மிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும்.

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். நண்பர்கள், உற
வினர்களுடன் பகைமை வந்து நீங்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனத்தாங்கல் வந்து நீங்கும்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.

துலாம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். மற்றவர்களிடம் குடும்பபிரச்சினைகளை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

விருச்சிகம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். குடும்பத்தில் பட்டும் படாமலும் இருக்கவும்.

தனுசு:வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். பணப் பற்றாகுறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொள்வீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்

மகரம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். கலை பொருட்கள் சேரும்.

கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள் குழப்பம் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும்.

மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும். பணவரவு அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x