Published : 29 Sep 2023 06:00 AM
Last Updated : 29 Sep 2023 06:00 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினர், உறவினர், நண்பர்களால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும்.

ரிஷபம்: நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்க திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். பணவரவு உண்டு.

கடகம்: நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைகூடும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் புது வேலை அமையும். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார். கலை பொருட்கள் சேரும்.

சிம்மம்: விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். எதிலும் நிதானமாக செயல்படப் பாருங்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி: மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

துலாம்: பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: பூர்வீக வீட்டை சீரமைத்து, புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் மீதான வீண் பழி நீங்கும்.

தனுசு: பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கலை பொருட்கள் சேரும்.

மகரம்: தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். நீண்ட நாளாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

கும்பம்: புதிதாக சொத்து வாங்குவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பொறுப்புகள் கூடும்.

மீனம்: யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். நண்பர்களுடன் புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x