Published : 26 Sep 2023 05:40 AM
Last Updated : 26 Sep 2023 05:40 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: மகன், மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வெளி வட்டாரங்களில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.

மிதுனம்: செலவுகளை குறைத்து சேமிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்: குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். பழுதாகியிருந்த பழைய வாகனத்தை மாற்றி புதிது வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்.

சிம்மம்: எந்தத் தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் உதவியால் சில வேலைகள் முடிவடையும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர்.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்ப்பது நல்லது. கலை பொருட்கள் சேரும்.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக நிறைவடையும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: அரசியல் செல்வாக்கு கொண்டவர் உங்களுக்கு அறிமுகமாவார். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணியிட மாற்றமாக வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். வீண் விவாதம் தவிர்க்கவும்.

தனுசு: உறவினர்கள், நண்பர்கள் உதவிக் கரம் நீட்டுவர். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் பணி கிடைக்கும்.

மகரம்: தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதில் குழப்பம் வரும். கையொப்பமிட்டு காசோலைகளை வைக்க வேண்டாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகவும்.

கும்பம்: வேலைச் சுமை இருக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் தடங்கல் ஏற்பட்டு பிறகு நிறைவடையும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே நேரடியாக களத்தில் இறங்கி வேலைகளை முடிப்பது நலம்.

மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். முன் பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x