Published : 06 Sep 2023 05:32 AM
Last Updated : 06 Sep 2023 05:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். முக்கிய பிரமுகர்களின் நட்பால் உற்சாகமடைவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு உண்டு.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீன் விவாதம் தவிர்க்கவும்.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். உறவினர்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயம் கவலை அளிக்கும்விதமாக இருக்கும்.

சிம்மம்: பிள்ளைகளால் புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். வீட்டில் திருமணம், சீமந்தம் என்று சுபச் செலவுகள் வரும்.

கன்னி: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

துலாம்: யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவர். வேலைச்சுமை அதிகரிக்கும். பழக்கமில்லாத நபர்களிடம் பேசுவதை அறவே தவிர்த்து விடவும்.

விருச்சிகம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட மகனின் திருமணம் நல்ல விதத்தில் நடைபெறும். புதிதாக வீடு, மனை வாங்கத் திட்டமிடுவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாளாக பேசாமலிருந்த உறவினர் உங்களைத் தேடி வருவார். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் கனவு நினைவாகும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் நடந்தேறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புதிய பதவி உங்களைத் தேடி வரும். புதிய தொழில் தொடங்குவீர்.

மீனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.பழைய வாகனம் செலவு வைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x