Published : 30 Aug 2023 05:35 AM
Last Updated : 30 Aug 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவர். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீட்டில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வீர்.

மிதுனம்: திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற கட்டிட வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

கடகம்: காலை 10 மணி முதல் சிலரின் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். பணவிஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். பழைய கடன்களைத் தீர்க்க புது வழிகளை யோசிப்பீர்கள்.

தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். மனதுக்கு இதமான செய்தி வரும். புதிய வீடு கட்ட கடனுதவி கிடைக்கும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வாகன யோகம் உண்டு.

மீனம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எக்காரணம் கொண்டும் யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேச வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x