Published : 21 Aug 2023 05:30 AM
Last Updated : 21 Aug 2023 05:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: இழுபறியாக உள்ள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். குடும்பத்துடன் சென்று, குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிப்பீர்கள். பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பூர்வீக சொத்தில் உங்கள் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

கடகம்: திடீர் பண வரவு, செல்வாக்கு உண்டாகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். மனதில் இருந்த வீண் அச்சம், கவலைகள் நீங்கும்.

சிம்மம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு, அதற்கேற்ப சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். பண வரவு உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.

கன்னி: வேலைச்சுமை அதிகரிக்கும். முடிந்துவிடும் என்று நினைத்த காரியங்கள் அலைய வைத்து முடியும். மாலை முதல் எதிலும் வெற்றி கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: அசதி, அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். வாகனம், வீடு வகையில் பராமரிப்பு செலவுகள் கூடும். பேச்சில் பொறுமை தேவை.

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். எதிலும் நிதானம் அவசியம்.

தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

மகரம்: சோம்பல் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். பல வகையிலும் பணப் புழக்கம் உயரும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். புதிய மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர்கள்.

கும்பம்: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். வீண் பயம், கவலை வேண்டாம். மின்சார சாதனங்களை கவனமாக கையாள்வது அவசியம். மாலை முதல் தொட்டது துலங்கும். பொருட்கள் சேரும்.

மீனம்: குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். அலைச்சல், அசதி குறையும். வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் மரியாதை கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x