Published : 04 Aug 2023 05:32 AM
Last Updated : 04 Aug 2023 05:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்ட செயல்களில் இனி வெற்றி உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மிதுனம்: மனஸ்தாபம் நீங்கி கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

கடகம்: குடும்பத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குவது அவசியம். மின்சாரம், மின்னணு சாதனங்கள் பழுதாகும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு உண்டு.

சிம்மம்: திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சீமந்தம், கிரஹப்பிரவேசம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவர்.

கன்னி: தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். விஐபிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

துலாம்: உறவினர்கள், நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். கலை, இசை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.

விருச்சிகம்: நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த காரியம் இப்போது கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.குடும்பத்தினருக்கு விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். புது வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வுகள் அதிகமாகும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்: பணவரவு அதிகரிக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். தடைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் கூடா பழக்க வழக்கம் விலகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

கும்பம்: வீண் பகை, விரயச் செலவு, முன்கோபம், திடீர் பயணங்கள் வந்து செல்லும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முயற்சிக்கவும்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். இருப்பினும் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x