Published : 19 Jul 2023 05:35 AM
Last Updated : 19 Jul 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்பாக செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடனில் ஒன்று தீரும்.

கடகம்: சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள்,சிறு குழப்பங்கள் வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள்.

சிம்மம்: அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. பூர்வீக விட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராக அமையும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் தேவை.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

தனுசு: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். நெருங்கிய நபரிடம் உங்கள் மனக்குறையை சொல்லி ஆதங்கப்படுவீர்.

மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்த - பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகிட்டும். ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். பழைய வாகனத்தை விற்பனை செய்ய முயற்சிப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x