Published : 09 Jul 2023 05:27 AM
Last Updated : 09 Jul 2023 05:27 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும்.உறவினர்கள், நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டு. நீங்கள் வேடிக்கையாக பேசுவது எல்லாம் தவறாக அர்த்தம் கொள்ளப்படும். கவனம் தேவை.

ரிஷபம்: புது வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். பொருட்கள் சேரும்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். பூர்வீக வீட்டை விற்பனை செய்துவிட்டு, நீங்கள் இருக்கும் இடத்தில் வீடு வாங்குவீர்.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு. மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்.

சிம்மம்: விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாக கையாள வேண்டும். கொஞ்சம் நிதானித்து செயல்படப் பாருங்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்.

கன்னி: குழப்பம் நீங்கி மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

துலாம்: பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக பேசாத உறவினர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவர்.

விருச்சிகம்: வீட்டை புதுப்பித்து கட்ட திட்டமிடுவீர். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக மனதை அரித்த விஷயத்தில் தெளிவு பிறக்கும்.

தனுசு: பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை புரிந்துகொண்டு வலிய வந்து உதவுவார்கள். பூர்வீக கிராமத்தில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.

கும்பம்: புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்.

மீனம்: யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வீண் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். யாருக்கும்,எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x