Published : 08 Jul 2023 05:29 AM
Last Updated : 08 Jul 2023 05:29 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மனக் குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்வீர்.

மிதுனம்: தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலை காணப்படும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும்.

கடகம்: சின்னச் சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்கவேண்டி வரும். பிற்பகல் முதல் சொந்த - பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பிற்பகல் முதல் எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: ஆடம்பர செலவை குறைப்பீர். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர். பழைய கடன்களில் ஒன்றுதீரவழி கிடைக்கும். வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம்: சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மதியத்துக்கு மேல் அமைதி நிலவும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

விருச்சிகம்: நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. நீங்கள் வேடிக்கையாக பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படும்.

மகரம்: புதுத் திட்டம் தீட்டுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: நண்பகல் வரை பண விஷயத்தில் கறாராக இருங்கள். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.

மீனம்: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எதிலும் கவனமுடன் செயல்படப் பாருங்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x