Published : 27 Jun 2023 05:25 AM
Last Updated : 27 Jun 2023 05:25 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய வழக்கில் நல்ல திருப்பம் வரும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பிருக்கிறது. நண்பர், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் கூடி வரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவது நல்ல விதத்தில் முடியும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்: கடந்த காலத்தில் நடந்த இனிமையான நிகழ்வுகள் நினைவுக்கு வரும். தாயாருடன் கருத்து மோதல் வரும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். பழைய கடன்களில் ஒன்று தீர வாய்ப்பு ஏற்படும்.

கடகம்: பிரச்சினைகளை கடக்க நல்ல வழி கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர்களின் அறிமுகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். புதிய நண்பர்களால் உங்கள் பிரச்சினைகள் பாதியாகக் குறையும். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: பணத் தட்டுப்பாடு குறைந்து தேவையான அளவு பணம் வரும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். சொந்த ஊரில் முதல் மரியாதை கிடைக்கும்.

கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். காய், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். சகோதர வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். குடும்ப விஷயங்களை பிறரிடம் கூற வேண்டாம்.

விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். ஷேர் மூலமாகவும் ஆதாயமடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளின் சாதனையால் பெருமை அடைவீர்கள்.

தனுசு: உறவினர்கள் வீட்டு திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

மகரம்: தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். யோகா, தியானம் என மனதை நிலைப்படுத்துவீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பழைய பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீரும். பொருள் சேரும்.

கும்பம்: இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதை அறிந்து செயல்படவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x