Published : 21 Jun 2023 05:26 AM
Last Updated : 21 Jun 2023 05:26 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகமா
வார்கள். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பண வரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். ஆன்மிகம் அதிகரிக்கும். நீண்ட நாளாக பேசாத உறவினர் வலிய வந்து பேசுவார்.

கடகம்: எதிர்மறை சிந்தனை வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். எதிலும் அவசரப்பட வேண்டாம். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்
கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

சிம்மம்: பணப் பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்து போகும். நட்பை இழக்க நேரிடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பூர்வீக கிராமத்து விழாவில் முதல் மரியாதை கிடைக்கும். பொருட்கள் சேரும்.

கன்னி: விஐபிகளின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. யாருக்கும், எதற்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

விருச்சிகம்: பழைய கடனைத் தீர்க்க யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தம் தேடி வரும். நீண்ட நாளாக இழுத்தடிக்கும் வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு: யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.

மகரம்: அழகு, இளமை கூடும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் கை ஓங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

மீனம்: பேசாமல் இருந்த உறவினர் பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம் - பக்கத்தினருடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x