Published : 13 Jun 2023 06:14 AM
Last Updated : 13 Jun 2023 06:14 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும்.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். முகப் பொலிவுடன் காணப் படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். பணவரவு உண்டு.
மிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கலை பொருட்கள் சேரும்.
கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
சிம்மம்: பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர். யோகா, தியானம் என மனம் செல்லும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
கன்னி: தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிற்பகல் முதல் எதிலும் முன்னெச்சரிக்ககையுடன் செயல்பட பாருங்கள்.
துலாம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர். பிள்ளைகளால் புகழ், கவுரவம் உயரும். உங்களால் வளர்ச்சி
யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
விருச்சிகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விருந்
தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சொத்து பிரச்சினை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.
மகரம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த - பந்தங்கள் மதிக்கும் அளவுக்கு நடந்து கொள்வீர்கள். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. புதிய பதவி கிட்டும்.
மீனம்: முன்கோபத்தை குறையுங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். பிற்பகல் முதல் தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT