Published : 10 Jun 2023 05:28 AM
Last Updated : 10 Jun 2023 05:28 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வீடு, மனை என்று புது சொத்து வாங்குவீர்கள். இழந்த செல்வாக்கை பெற ஒரு வாய்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மரியாதை கூடும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர்.

ரிஷபம்: மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். பால்ய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு.

மிதுனம்: அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். கிராமத்து திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும். அக்கம் பக்க வீட்டாரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

கடகம்: சிறு அவமானம், வீண் விரயம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனதில் தேவையற்ற பயம் தோன்றி நீங்கும். உறவினர், நண்பர்களின் ஆதரவு உண்டு.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீக வீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வீர்.

கன்னி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பணவரவு உண்டு.

துலாம்: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்த - பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிட்டும். கலை பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை
களின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்கு
வீர்கள். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட தூர சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். கடன்கள் குறைந்து சேமிக்கத் தொடங்குவீர்.

மகரம்: உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு திருமணம் கைகூடும்.

கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் நெருடல் வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். புதிய பதவி, பொறுப்புகள் அமையும்.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கலை பொருட்கள் சேரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x