Published : 07 Jun 2023 05:36 AM
Last Updated : 07 Jun 2023 05:36 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார் கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த - பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுறும்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத் தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்வீர்கள்.

விருச்சிகம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்து போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங் களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்ட பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். தியானம் செய்யவும்.

கும்பம்: ஆடம்பரமான செலவுகளை குறைக்கப் பாருங்கள். மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டால் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த பயம் நீங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x