Published : 27 Sep 2017 09:56 AM
Last Updated : 27 Sep 2017 09:56 AM
நா
டக மேதை ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா ‘அமெச்சூர் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ சார்பில் சென்னை வாணி மஹாலில் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 22-ம் தேதி தொடங்கிய இவ்விழா, வரும் 30-ம் தேதி வரை நாடகம், நடனம், இசை நிகழ்ச்சிகள் என்று பல பிரிவுகளில் கொண்டாடப்படுகிறது. ஒய்.ஜி.பி-யின் மகன் ஒய்.ஜி. மகேந்திரா நடத்தும் இந்நிகழ்வில் இயக்குநர், நடிகர் விசு கலந்துகொண்டார். தனக்கும் தனது நண்பர்கள் ஒய்.ஜி.மகேந்திரா, மவுலி ஆகியோரது திரைத்துறைப் பயணத்துக்கும் ஒய்.ஜி.பி எந்த விதத்தில் ஈர்ப்பாக இருந்தார் என்பதை விழாவில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் விசு.
அவர் பேசியதாவது: ‘‘1967-ல் இருந்து 1973 வரை நான், மவுலி, ஒய்.ஜி.மகேந்திரன் மூவரும் தூங்கும் நேரத் தைத் தவிர தனியாக பிரிந்து இருந்ததே இல்லை. 1967-ல் எனக்கு 22 வயது. மவுலிக்கு வயது 19. மகேந்திரனுக்கு 18. வாழ்க்கையில் 15 முதல் 25 வயது வரையிலான பருவம் நெருப்பு ஆற்றில் நீந்தக் கூடிய பருவம். அது எப்படியென்றால் சந்தன மரத்தை சுற்றி பாம்பு இருக்கும். அந்தச் சூழ் நிலையில் சந்தனமரம் தன் மணத்தை இழக்கக்கூடாது. சுற்றியிருக்கும் பாம்பின் விஷத்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த மாதிரிதான் ஒவ்வொரு இளைஞனும்.
அந்நாட்களில் ஒய்.ஜி.பி-யின்அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பார்த்துப் பார்த்து வளர்ந்தோம். அதை மனதில் எடுத்துக்கொண்டதால்தான் பின்னாட்களில் நாங்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடிந்தது. அது எந்த அளவுக்கு என்பதை சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரிந்ததுதான். ஒய்.ஜி.பி நூற்றாண்டு விழாவில் நான், ஒய்.ஜி.மகேந்திரன், மவுலி மூவரும் எடுத்துக்கொண்ட இப்புகைப்படத்தை பார்க்கும்போது, இன்றைய இளைஞர்கள் வயதான ஒருவரின் வழிகாட்டுதலில் இயங்க வேண்டும் என்பதே.’’ என்று ஒய்.ஜி.பி நினைவுகளைப் பகிர்ந்துகொண்டர் விசு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT