Published : 13 Jun 2014 08:36 AM
Last Updated : 13 Jun 2014 08:36 AM
பொன்னியின் செல்வன், மேஜிக் லான்டர்ன் குழுவினரால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் வெற்றிகரமாக மேடையிருக்கிறான். எஸ்.எஸ். இண்டர்நேஷனல் லைவ் நிறுவனத்தின் தயாரிப்பில் சென்னை மியூசிக் அகாடமியில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்தை முதல் நாள் பார்க்க வந்த மக்கள் திர ளின் அபரிமிதமான உற்சாகம் பொன் னியின் செல்வன் அறுபது ஆண்டு களுக்குப் பின்னும் உயிர்ப்புடன் இருக்கிறான் என்பதை உறுதி செய்தது.
பொன்னியின் செல்வனை மேடையில் கொண்டு வரும் சவாலை மேஜிக் லான்டர்ன் குழுவி னர் வெற்றிகரமாகவே எதிர் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலச் சூழலை மேடையில் கொண்டு வருவதில் ஒலி, ஒளி, நடிப்பு, வசன உச்சரிப்பு, காட்சி அமைப்பு என எல்லா அம்சங்க ளிலும் மெனக்கிட்டிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு, தோட்டா தரணி யின் மேடை அமைப்பு, நளினி ராமின் ஆடை வடிவமைப்பு, பால் ஜேகப்பின் பின்னணி இசை எனப் பல அம்சங்கள் நாடகத் திற்கு வலு சேர்க்கின்றன. பிரவீ னின் இயக்கத்தையும், இளங்கோ குமரவேலின் நாடகமாக்கத் தையும் பொன்னியின் செல்வ னின் தீவிர ரசிகர்கள் ஏற்றுக்கொண் டிருக்கிறார்கள் என்றே சொல்ல லாம்.
சோழர்களின் வரலாற்றைத் தழுவி எழுதப்பட்ட இந்நாவல் ஆதித்த கரிகாலனின் சகாவான வந்தியத் தேவன் மூலமாகவே பயணிக் கும். நாவல் முழுவதும் பயணிக் கும் இன்னொரு பாத்திரம் ஆழ் வார்க்கடியான். இவர்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகளை நாவலில் இருக்கும்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வந்தியத் தேவனாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், ஆழ்வார்க் கடியானாக வரும் ஹன்ஸ் கௌசிக் ஆகியோர் தங்கள் பங்கைச் செவ்வனே ஆற்றியிருக்கிறார்கள்.
சுந்தர சோழர் (விஸ்வநாதன் ரமேஷ்), பெரிய பழுவேட்டரையர் (பேராசிரியர் ராமசாமி), குந்தவை (ப்ரீத்தி ஆத்ரேயா), அருண் மொழி வர்மன் (ராம்), ரவி தாசன் (குமரவேல்) போன்ற முக்கிய கதாபத்திரங்களில் நடித்தவர் களும் தங்கள் பங்களிப்பைச் செம் மையாகவே செய்திருக்கிறார்கள். ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் பசுபதி மூன்று காட்சிகளில் வந்தா லும் தன் அழுத்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார்.
நந்தினி (மீரா கிருஷ்ணமூர்த்தி), பூங்குழலி(காயத்ரி ரமேஷ்), வானதி (பவானி) போன்ற கதாப் பாத்திரங்களுக்குக் கல்கி கொடுத் திருந்த முக்கியத்துவத்தை நாடகத் தில் காட்சிகளாகக் கொண்டுவர முடியவில்லை என்பது ஏமாற்றம் தான்.
இன்னொரு ஏமாற்றம் கதைக்குத் தலைப்பு தந்த அருண்மொழி வர்மன் பற்றியது. பொன்னியின் செல்வன் எனக் கொண்டாடப்படும் அருண்மொழியின் மிகப் பெரிய பலமே அவனுடைய வசீகரமும் நிதானமும்தான். அவற்றை இந்தப் பொன்னியின் செல்வனிடத்தில் பார்க்க முடியவில்லை. அத்துடன் வந்தியத்தேவனின் நகைச்சுவை உணர்வுக்குத் தரப்பட்டுள்ள முக்கி யத்துவம் அவனுடைய வீரத்திற் கும் சாதுர்யத்திற்கும் கொடுக்கப் படவில்லை.
முதல் இரண்டு பாகங்களில் வரும் காட்சிகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுத் துவிட்டு மற்ற பாகங்களின் காட்சி களை அவசர அவசரமாக முடித்தி ருக்கத் தேவையில்லை. நாவல் படித் தவர்கள் பலருக்கும் வானதிக்கும் அருண்மொழிக்கும் நடக்கும் உரையாடல் பிடித்தமானதாக இருக்கும். ஆனால், வந்தியத்தேவன் - குந்தவை காதலை மட்டும் காட்சிப் படுத்திவிட்டு வானதி - அருண் மொழிவர்மன் காதலைக் காட்சிப் படுத்த மறந்திருக்கிறார்கள்.
நவீன நாடகத்தின் கூறுகள் சிலவற்றைக் கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் வீர பாண்டியன் வாளைக் கையில் வைத்துக்கொண்டு நந்தினி நவீன நாடக ‘அசைவு’களைச் செய்வது ஒட்டவில்லை.
நாவலைப் படிக்காமல் நாடகத் தைப் பார்க்க வரும் பார்வையாளர் களுக்கு உதவும் வகையில் கதைக் கான இணைப்புகளை வழங்கி யிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், நந்தினிக்கும் கரிகாலனுக் கும் இடையே உள்ள உறவின் பின்கதை, மந்தாகினிக்கும் சுந்தர சோழருக்கும் இடையே உள்ள உறவின் சிக்கல்கள் ஆகியவை நாவல் படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும் வகையில் நாடகமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். அந்தக் காலத்து சைவ வைணவ மோதல் களுக்கான பின்னணி பற்றியும் சொல்லியிருக்கலாம்.
கூடுமானவரை கல்கி யின் வசனங்களையே பயன்படுத்தி யிருப்பது நாடகத்தின் சிறப்பு. சில நடிகர்கள் சில இடங்களில் திணறினாலும், சிறப்பான உடல் மொழி, வசன உச்சரிப்பு என அதை ஈடுகட்டிவிடுகிறார்கள்.
காட்சி அமைப்பைப் பொருத்த வரை ‘யானை’ அம்பாரியில் வானதி யும் பூங்குழலியும் வரும்போது அரங் கம் ஆர்ப்பரிக்கிறது. அதேபோல், பூங்குழலி, வந்தியத்தேவன் படகுப் பயணமும் கவனத்தை ஈர்க்கி றது. நாவலில் இருக்கும் பிரம் மாண்டத்தை இந்தக் காட்சிகள் மேடைக்கும் கொண்டுவருகின்றன. பார்த்திபேந்திரன் இரு கைகளிலும் கத்தியைச் சுழற்றும் காட்சி மனதில் நிற்கிறது. ரவிதாஸனாக நடித்திருக்கும் குமரவேலின் உடல் மொழி அபாரம். பூங்குழலியாக வரும் காயத்ரியின் உடல் மொழி யும் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
சுமார் மூவாயிரம் பக்கம் நீள முள்ள பொன்னியின் செல்வனை மூன்றரை மணி நேர நாடகமாக வெற்றிகரமாக உருவாக்கியிருப்பதில் மேஜிக் லான்டர்ன் குழுவினரின் முயற்சியை தமிழ்கூறு நல்லுகம் நிச்சயம் பாராட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT