Published : 12 Mar 2014 05:57 PM
Last Updated : 12 Mar 2014 05:57 PM
கடந்த 1991-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு மூலம் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம் அது. ராஜீவ் காந்தியின் நினைவு மண்டபம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஊர் இது. ஸ்ரீராமானுஜருக்கு இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனி சன்னிதி இருக்கிறது. மேலும், ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT