Published : 12 Mar 2014 05:54 PM
Last Updated : 12 Mar 2014 05:54 PM
ஏ. முத்துகுமார் - மாவட்டச் செயலாளர், சி.ஐ.டி.யூ. :
ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, மாம்பாக்கம் ஆகிய இடங்களில் இருக்கும் தொழிற்பேட்டை கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பன்னாட்டு நிறுவனங் கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்கு சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் 20 ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள்.
ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டும் எனில், தொழிற்சாலைக்கு மத்திய, மாநில அரசுகள் என்னென்ன சலுகைகளை வழங்க வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர். அதற்கான தொழில் கொள்கைகளையும் உருவாக்குகின்றனர். ஆனால், தொழிலாளர்களுக்கு, தொழில் தொடங்கும் நிறுவனங்கள் என்னென்ன வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என்று எந்த அரசும் கேட்பதில்லை. அரசுக்கும் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தொழிலாளர் நலன் காக்கும் அம்சங்கள் இடம்பெறுவதில்லை.
பெரும்பான்மைத் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், விபத்துக் காப்பீடு, வருங்கால வைப்புநிதி ஆகியவை மறுக்கப்பட்டுள்ளன. 10 பேர் பயணிக்க வேண்டிய தொழிற்சாலை வாகனத்தில் 30 பேர் ஏற்றப்படுகின்றனர். பணியின்போது விபத்து ஏற்பட்டால் அவசரச் சிகிச்சை அளிக்க ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லை. இதனால் பலர் கை, கால், கண்களை இழந்துள்ளனர். வெளி மாவட்ட, மாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்கும் உணவு உண்பதற்கும் போதிய வசதிகள் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT