Published : 21 Jan 2014 11:56 AM
Last Updated : 21 Jan 2014 11:56 AM
நலிந்துவரும் நாட்டுப்புறக் கலை களையும் நாட்டுப்புறக் கலைஞர் களையும் காப்பாற்ற பிரத்தியேக பயிற்சிக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என முதல்வருக்கு நாட்டுப் புறக் கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,
கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம் பாட்டம், தப்பாட்டம், உருமி என 60-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகளை தமிழ் மண்ணின் சொத்தாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள் நாட்டுப்புறக் கலைஞர் கள். 10 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் தமிழகம் முழுக்க பரவிக் கிடக்கிறார்கள். ஆனாலும், போதிய வருமானம் இல்லாமலும் ஊக்குவிக்க ஆட்கள் இல்லாத தாலும் நாட்டுப்புறக் கலைகள் நலிவடைந்து வருவதுடன் அதை கற்றுத் தெரிந்த கலைஞர்களும் மாற்றுத் தொழில்களை தேடி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
காணாமல் போன கலைஞர்கள்
ஒரு காலத்தில் தஞ்சை கீழவாசல் பகுதியிலிருந்து திருவையாறு பேருந்து நிலையம் வரை முழுக்க முழுக்க நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டுமே குடியிருந்தார்கள். இப் போது அங்கொன்றும் இங்கொன்று மாக இருக்கும் கலைஞர்களைத் தேடவேண்டி இருக்கிறது.
ஏன் இந்த நிலை?
தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் நடன, நையாண்டி மேள சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தஞ்சை செல்வராஜ் ‘தி இந்து’விடம் பேசினார்.
1950-களில் பஞ்சம் பிழைக்க தெற்கத்தி சீமையிலருந்து இங்கே வந்தோம். அப்ப எங்களுக்கு சோறு போட்டது நாட்டுப்புறக் கலைதான். அப்பல்லாம் முக்கா ரூபாய் சம்பளத் துக்கு ராத்திரி முழுக்க நடனம் கட்டு வோம். இப்ப 600 ரூபாய் வரைக்கும் கிடைக்குது. ஆனாலும், அப்ப இருந்த நிம்மதியும் சந்தோசமும் இப்ப இல்லை. மக்களிடம் நாட்டுப் புறக் கலைகளுக்கு இன்னும் வர வேற்பு இருக்கு. ஆனா, அதைப் போற்றி வளர்க்கத்தான் ஆள் இல்லை.
தை மாசத்திலருந்து ஆடி மாசம் வரைக்கும் ஓரளவுக்கு பொழப்பு இருக்கும். அதுக்குப் பின்னாடி கஷ்டம்தான். பொம்பளப் புள்ளைங்க ஊதுபத்தி சுத்துறதுக் கும் வயல் வேலைக்கும் போயிரும். நாங்க சாவு வீட்டுக்கு மேளம் வாசிக்கப் போயிருவோம். வருசத் துல அஞ்சு மாசம் பொழப்பு இல்லைன்னா என்ன பண்றது? இதைப் பத்தி யாரும் கவலைப் படலைங்க. அப்புறம் எப்படி கலையை காப்பாத்துறது?
கல்லூரி தொடங்கணும்
ஸ்கூலு, காலேஜுல படிக்கிற பிள்ளைங்கள கரகாட்டம், ஒயிலாட் டம் ஆட வைச்சு ஷோ காட்டுறாங்க. இந்தக் காலப் புள்ளைங்க எவ்ளோ அருமையா ஆடுறாங்க. எல்லார் கிட்டயும் கலையம்சம் இருக்கு. அதை வெளிக்கொண்டு வரணும். நாட்டுப்புறக் கலைகளை சொல்லிக் குடுக்க தனியான பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கலாம். எங்களைப் போல அனுபவம் வாய்ந்த கலைஞர் களை வைத்து கலைகளை சொல்லிக் கொடுக்கலாம்.
எம்.ஜி.ஆர். காலம் பொற்காலம்
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். காலம்தான் பொற் காலம். அவரு முதலமைச்சரா இருந்தப்ப, இசைக் கருவிகள் வாங்க வும் தொழில் இல்லாதப்ப பொழைக் கிறதுக்காக பெட்டிக் கடைகள் வைக்கவும் கடன் குடுத்தாரு. அந்த சலுகைகள் எங்களுக்கு திரும் பக் கிடைக்கணும்.
நாட்டுப்புறக் கலைஞர்கள் பல பேரு குடியிருக்க வீடுகூட இல்லாம கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் குடுக்கணும். நலிந்த கலைஞர்களுக்கு குடுக்குற 1500 ரூபாய் பென்ஷனை உயர்த் திக் குடுக்கணும். இதை எல்லாம் தமிழக முதல்வருக்கு கோரிக்கையா வைச்சிருக்கோம். நேர்ல பார்த்தும் முறையிடப்போறோம். இவ்வாறு செல்வராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT