Published : 12 Sep 2018 12:26 PM
Last Updated : 12 Sep 2018 12:26 PM
ஈரோட்டில் பட்டாசு மூட்டைகளை இறக்கும் போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.
ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவரது மகன் கார்த்திக் ராஜா (21). ஈரோடு சாஸ்திரிநகரில் பிள்ளயார் வீதியில் மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு விற்பனை செய்வதற்காக, சேலத்தில் இருந்து கல்வெடி எனப்படும் பட்டாசை சுகுமாரன் வாங்கியுள்ளார்.
இன்று காலை 6 மணிக்கு ஆட்டோவில் 15 மூட்டை பட்டாசு எடுத்து வரப்பட்டுள்ளது. அதனை இறக்கி வைக்கும்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திக் ராஜாவும், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் என மூவர் பலியாயினர். இறந்தவர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு வெடித்ததில் சாஸ்திரி நகர் பிள்ளயார் வீதியில் இருந்த ஐந்து வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தற்காக வாங்கி வந்தபோது, விபத்து ஏற்பட்டுள்ளதாக டி.ஆர்.ஓ. கவிதா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT